செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2019-11-23 04:00 GMT   |   Update On 2019-11-23 04:00 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 143 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 6 ஆயிரத்து 943 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

நேற்று 8 ஆயிரத்து 143 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 6 ஆயிரத்து 943 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவே நீடிக்கிறது.

இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் அணை நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News