செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-11-22 04:18 GMT   |   Update On 2019-11-22 04:18 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதாலும் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 143 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று குறைந்து 7 ஆயிரத்து 510 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காவிரியில் 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதாலும் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரியில் 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
Tags:    

Similar News