செய்திகள்
நிர்மலாதேவி

நிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு

Published On 2019-11-18 10:34 GMT   |   Update On 2019-11-18 10:34 GMT
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராகாததையடுத்து, அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கைதானவர்கள் ஜாமீனில் வெளிவந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். பேராசிரியை நிர்மலாதேவி விசாரணைக்கு வந்தபோது மொட்டையடித்தபடி வந்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருப்பசாமி, முருகன் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி பரிமளாதேவி வழக்கு விசாரணையை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News