செய்திகள்
வேலூரில் இன்று காலை மழை பெய்தது. மழையில் நனைந்தவாறு பள்ளிக்கு சென்ற மாணவிகள்.

வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

Published On 2019-10-21 05:16 GMT   |   Update On 2019-10-21 05:16 GMT
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. சாத்தனூர் அணை, தண்டராம்பட்டு, போளூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்று காலை மாவட்டம் முழுவதும் மந்தமான தட்பவெப்ப நிலை நிலவியது.சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் அவதி அடைந்தனர்.

சாத்தனூர் அணைக்கு 428 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 83.25அடியாக உள்ளது. குப்பநத்தம் அணை நீர்மட்டம் 41.33 அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லை.

செண்பகத்தோப்பு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக அணைக்கு 16 அடி கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 62.32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 47.23 அடி தண்ணீர் உள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

திருவண்ணாமலை-10.3, ஆரணி-11, செய்யாறு-6.5, செங்கம்-12.6, சாத்தனூர் அணை-33.4, வந்தவாசி-13.2, போளூர்-25.8, தண்டராம்பட்டு-31.6, சேத்துப்பட்டு-5, கீழ்பெண்ணாத்தூர்-16.8, வெம்பாக்கம்-4.

இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. ஆம்பூர், நாட்டறம்பள்ளி, காவேரிப்பாக்கம், கேத்தாண்டப்பட்டி, மேல்ஆலத்தூர் பகுதிகளில் மழை பெய்துள்ளது.

வேலூரில் இன்று காலை சாரல் மழை பெய்தது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர், மோர்தானா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News