செய்திகள்
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம்

ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் மெட்ரோ நடை மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு

Published On 2019-10-08 04:39 GMT   |   Update On 2019-10-08 04:39 GMT
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் ஜி.எஸ்.டி. சாலையை கடக்க வசதியாக கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம் அடுத்த திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் 4 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சாலையை கடக்க பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.

பயணிகள் எளிதில் மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்வதற்கு வசதியாக ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே மெட்ரோ நடை மேம்பாலம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.

கடந்த ஆண்டு மே மாதம் நடை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. இந்த மாதம் இறுதியில் கட்டுமான பணிகள் நிறைவடைகிறது. தற்போது நடைமேம்பால இறுதி பணிகள் நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் (நவம்பர்) நடை மேம்பாலம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக மிகப்பெரிய நடை மேம்பாலமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் ஜி.எஸ்.டி. சாலையை கடக்க பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். பயணிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அங்கு மிகப்பெரிய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நடை மேம்பாலம் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அடுத்த மாதம் (நவம்பர்) நடை மேம்பாலம் பயணிகள் வசதிக்காக திறந்து வைக்கப்படும். இதன் மூலம் பயணிகள், பொதுமக்கள் ஜி.எஸ்.டி. சாலையை எளிதில் கடந்து செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News