செய்திகள்
பலி

அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் மயங்கி விழுந்து பலி

Published On 2019-09-23 17:26 GMT   |   Update On 2019-09-23 17:26 GMT
சேலத்தில் அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்:

சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துகழக அலுவலகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பண பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், டாக்டர். சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் இருந்து வந்திருந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் மணி என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விழாவிற்கு வந்தவர்கள் அவரை சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் மணி இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News