செய்திகள்
வெங்காயம்

கோயம்பேடு மார்கெட்டில் வெங்காயம் விலை உயர்வு

Published On 2019-08-26 09:43 GMT   |   Update On 2019-08-26 09:43 GMT
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.
போரூர்:

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் வரத்து குறைந்து உள்ளது. வெங்காயம் விலை உயர்வு குறித்து வியாபாரி சித்திரைபாண்டியன் கூறியதாவது:-

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து தான் கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தற்போது அங்கு பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 60 லாரிகள் வரை வந்த வெங்காயம் தற்போது 35 லாரிகளில் மட்டுமே வருகிறது.

இதன் காரணமாக விலை அதிகரித்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சில்லரை விற்பனையில் 1கிலோ ரூ 23-க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் விலை உயர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் இன்றைய மொத்த விலை விபரம் வருமாறு:-

நாட்டு தக்காளி- ரூ. 17
பெங்களூர் தக்காளி- ரூ. 17
வெங்காயம் - ரூ. 30
சி.வெங்காயம் - ரூ. 50
உருளைக்கிழங்கு-ரூ. 16
கத்திரிக்காய்- ரூ. 15
பீன்ஸ் - ரூ. 40
அவரைக்காய்- ரூ. 20
கொத்தவரங்காய்- ரூ. 20
வெள்ளரிக்காய்- ரூ. 15
மாங்காய்-ரூ. 100
முட்டை கோஸ் - ரூ. 8
முருங்கைக்காய்- ரூ.40
கோவக்காய்- ரூ.15
பீட்ரூட்- ரூ.20
நூக்கல் - ரூ. 8
கேரட்- ரூ.40
வெண்டைக்காய்- ரூ. 15
புடலங்காய்-ரூ. 10
பச்சை மிளகாய்- ரூ. 25
இஞ்சி-ரூ. 120
Tags:    

Similar News