செய்திகள்
சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படை கப்பலை மாணவர்கள் கொடி அசைத்து வரவேற்ற காட்சி.

நட்பு பயணமாக அமெரிக்க கடற்படை கப்பல் சென்னை வருகை

Published On 2019-08-23 09:04 GMT   |   Update On 2019-08-23 09:04 GMT
நட்புறவை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கடலோர காவல் படை கப்பல் இன்று மதியம் சென்னை துறைமுகத்துக்கு வந்தது.

சென்னை:

இந்தியா-அமெரிக்கா இடையே நட்புறவு நீடித்து வருகிறது.

இதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா கடற்படையைச் சேர்ந்த கடலோர காவல் படை கப்பல் இன்று மதியம் சென்னை துறைமுகத்துக்கு வந்தது. ‘ஸ்டாட்டன்’ என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் நவீன வசதிகளை கொண்டது.

‘ஸ்டாட்டன்’ கப்பலில் பல்வேறு அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுமக்களும் இந்த கப்பலை பார்வையிடலாம்.

சென்னை துறைமுகம் வந்த இந்த கப்பலை தமிழக கடலோர காவல் படையினர் இசைவாத்தியம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். பள்ளி மாணவ- மாணவிகளும், இந்திய அமெரிக்க கொடிகளை அசைத்து வரவேற்றனர்.

வருகிற 27-ந்தேதி வரை இந்த கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதையொட்டி துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதி பெற்று ‘ஸ்டாட்டன்’ கப்பலை நேரில் சென்று பார்வையிடலாம். 

Tags:    

Similar News