செய்திகள்
பிஆர் பாண்டியன்

ஓஎன்ஜிசிக்கு தடை விதிக்கக்கோரி 26-ந்தேதி பாராளுமன்றம் முற்றுகை - பிஆர் பாண்டியன்

Published On 2019-07-22 05:25 GMT   |   Update On 2019-07-22 05:25 GMT
டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி.க்கு தடை விதிக்கக்கோரி 26-ந்தேதி பாராளுமன்றம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

மன்னார்குடி:

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சிக்கு கடந்த 2015 முதல் புதிய கிணறுகள் அமைக்க மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் கச்சா என்ற பெயரில் ஹைட்ரோகார்பன் , பாறை எரிவாயு எடுக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஓ.என்.ஜி.சி.க்கு தடை விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (23-ந் தேதி) தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிக்கரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து தெரிவிப்போம். மேலும் இந்த திட்டத்தை கைவிட கோரி டெல்லி பாராளுமன்றம் முன்பு வருகிற 25-ந் தேதி உண்ணாவிரதமும், 26-ந் தேதி முற்றுகை போராட்டமும் நடைபெற உள்ளது.

உண்ணாவிரத போராட்டத்தை புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து கலந்து கொள்கிறார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் பங்கேற்க கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News