செய்திகள்
வானிலை வரைப்படம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

Published On 2019-07-17 07:25 GMT   |   Update On 2019-07-17 07:25 GMT
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஜூன்1ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே மழைப்பெய்ய தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்களில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால் கன்னியாகுமரி, நெல்லை, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   


 
Tags:    

Similar News