செய்திகள்
கோப்புப்படம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை எட்டியது

Published On 2018-12-03 04:51 GMT   |   Update On 2018-12-03 04:51 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 4 ஆயிரத்து 763 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 696 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 2500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 103.72 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.8 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் இன்னும் 2 நாட்களில் 104 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MetturDam
Tags:    

Similar News