இந்தியா

விடைத்தாள் திருத்தும் போது ரீல்ஸ் வீடியோ எடுத்த ஆசிரியை

Published On 2024-05-28 15:13 IST   |   Update On 2024-05-28 15:13:00 IST
  • ஆசிரியை கேமராவை பார்த்து சைகை செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
  • வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு ஆசிரியை ஒருவர் உருவாக்கிய ரீல்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் பிபியூ தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதில், விடைதாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ஒருவர் விடைகளை கூட பார்க்காமல் ரீல்ஸ் வீடியோ தயாரிப்புக்காக விடைத்தாள்கள் தரப்படுத்தும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோவில் விடைத்தாள் திருத்தும் அறையில் சர்ச்சைக்குரிய ஆசிரியை மற்றும் சில ஆசிரியைகள் அமர்ந்துள்ளனர்.

அதில், சம்பந்தப்பட்ட ஆசிரியை கேமராவை பார்த்து சைகை செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் அந்த ஆசிரியை விடைத்தாள்களை கவனிக்காமலேயே அதனை திருத்துவது போன்று பாவனை செய்யும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News