செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்

ஆத்தூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தற்கொலை

Published On 2018-10-12 04:15 GMT   |   Update On 2018-10-12 04:15 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும்  அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்ற 12-ம் வகுப்பு மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி வசந்தகுமாரும், காவியாவும் திருமணம் செய்து கொண்டனர்.

காவியா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் சண்டை மூண்டது. பின்னர் இருவரும் தூங்கினார்கள். இரவு 1 மணி அளவில் காவியாவின் அலறல் சத்தம் கேட்டு வசந்தகுமார் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது காவியா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவியை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் வசந்தகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News