செய்திகள்
தருமபுரியில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்.

பேராசிரியர் நியமனத்திலும் ஊழல்: தருமபுரியில் பரபரப்பு போஸ்டர்கள்

Published On 2018-10-08 04:40 GMT   |   Update On 2018-10-08 04:40 GMT
பேராசிரியர்கள் நியமனத்திலும் பணம் வாங்கி கொண்டு முறைகேடு செய்ததாக புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி குற்றம்சாட்டி உள்ளது. #Scam
தருமபுரி:

பல கோடி வாங்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டினார்.

தற்போது பேராசிரியர்கள் நியமனத்திலும் பணம் வாங்கி கொண்டு முறைகேடு செய்ததாக புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் தருமபுரி நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்க்ள ஒட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக ஆளுனரே, உயர் கல்வி துறையே, பேராசிரியர் நியமனத்தில் தொடரும் முறைகேடுகள், முறைகேடாக நடந்த பணி நியமனத்தை ரத்து செய்.

தமிழ்நாடு அரசு உதவி-மானியம் பெறும் கல்லூரிகளில் தொடரும் ஆசிரியர் நியமனத்தில் விற்பனை-இடஒதுக்கீடு முறைகேடுகள்.

முறைகேட்டுக்கு தமிழக அரசு, உயர்கல்வி துறை, கல்லூரி கல்வி இயக்குனர், இடை இயக்குனர் என அனைவரும் ஒப்புதல்.

2013-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இடஒதுக்கீடு நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணைக்கு உத்தரவிடு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Scam



Tags:    

Similar News