செய்திகள்

எம்.பி.பி.எஸ். அரசு ஒதுக்கீடு விவகாரம் - புதுச்சேரி சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Published On 2018-07-16 10:26 GMT   |   Update On 2018-07-16 10:26 GMT
புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பிரச்சினை எழுப்பிய அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #PondyAssembly #PondyADMKWalkout
புதுச்சேரி:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எம்பிபிஎஸ் இடங்களை கூடுதலாக பெறுவது தொடர்பாக சட்டசபையில் இன்று அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது.



அப்போது, அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், திமுக உறுப்பினர் ஆர்.சிவா, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்த் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் பேசிய அன்பழகன், ஜல்லிக்கட்டு பாணியில், தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து  கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு பெறுவதற்காக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு அரசுத் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #PondyAssembly #PondyADMKWalkout

Tags:    

Similar News