செய்திகள்
கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசி மூடைகள்.

கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2018-07-08 07:58 GMT   |   Update On 2018-07-08 07:58 GMT
கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கூடலூர்:

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் அரிசியை சிலர் மொத்தமாக கொள்முதல் செய்து கேரளாவுக்கு ரகசியமாக கடத்துகின்றனர்.

கழுதைகள் மூலமும் தோட்ட தொழிலாளர்கள் மூலமும் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. அதிகாரிகளின் தீவிர சோதனையால் அது கட்டுபடுத்தப்பட்டது. அதன் பின்பு அரசு பஸ்களில் கடத்தினர். போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தியதால் சில நாட்கள் ரேசன் அரிசி கடத்தல் இல்லாமல் இருந்தது.

தற்போது மீண்டும் ரேசன் அரிசி கடத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குமுளி அருகே தமிழக வனப்பகுதியில் ரேசன் அரிசிகளை பதுக்கி சிலர் கேரளாவுக்கு கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் கண்ணணுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அதிகாரிகள் வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செடிகளுக்குள் 20 மூட்டைகள் கிடந்தது. அதனை கைப்பற்றி சோதனையிட்டதில் 500 கிலோ ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் வந்ததால் பதுக்கல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரேசன் அரிசியை கைப்பற்றிய அதிகாரிகள் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

Tags:    

Similar News