செய்திகள்

ரெயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

Published On 2018-06-22 12:21 GMT   |   Update On 2018-06-22 12:31 GMT
ரெயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். #Trainselfie

வேலூர்:

காட்பாடி, ஜோலார்பேட்டை, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் செல்பி எடுப்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தண்டவாளத்தில் ரெயில் வரும்போது செல்பி எடுப்பது, ஓடும் ரெயிலில் நின்றபடி செல்பி எடுக்கும் வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற காட்சிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

ரெயில் நிலையங்களில் செல்பி எடுக்கும் போது ஏற்படும் விபத்துக்களை தடுக்க ரெயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ரெயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் படிக்கட்டு அருகே நின்று செல்பி எடுப்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கபடும் என ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

ரெயில் பயணிகள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். #Trainselfie

Tags:    

Similar News