செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விடிய விடிய கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Published On 2017-12-08 05:59 GMT   |   Update On 2017-12-08 05:59 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் விடிய விடிய கனமழையால் வீடுகளில் வெள்ளம் சூழந்தது.இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குடிநீர் பிரச்சினையும் தீர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஒக்கி புயல் காரணமாக தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்தது.

விருதுநகர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் விவசாய பணிகள் தொடங்கின.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக்நகர், இடையபொட்டில் தெரு, ஆத்துக்கடை தெருவில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழந்தது. விடிய விடிய மழை நீடித்தது. ராஜபாளையம் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கன மழை கொட்டியது.

Tags:    

Similar News