செய்திகள்
பானுமதி

கோவையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

Published On 2017-10-21 09:18 GMT   |   Update On 2017-10-21 09:18 GMT
கோவையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர்.
கோவை:

திருப்பூர் பழைய பஸ்நிலையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். எலக்ட்ரிசீயன். இவரது மனைவி பானுமதி (வயது 30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 18-ந் தேதி பானுமதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பானுமதிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இது குறித்து பானுமதியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் பானுமதியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

இதனையடுத்து பானுமதியின் உடல் உறுப்புகளை பிரித்து எடுப்பதற்காக காலை 11 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. அவரது உடலில் இருந்து நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இருதயம் ஆகியவை பிரித்து எடுக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மாலை 6.30 மணி வரை நடந்தது.

பின்னர் பானுமதியின் உடலில் இருந்து பெறப்பட்ட நுரையீரல், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ஆகியவை பி.எஸ்.ஜி. ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கும், இருதயம் சென்னையில் உள்ள போர்ட்டீஸ் மலர் ஆஸ்பத்திரிக்கு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News