செய்திகள்

புளூவேல் விளையாட்டால் மன அழுத்தத்துக்கு ஆளான என்ஜினீயரிங் மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2017-10-06 06:43 GMT   |   Update On 2017-10-06 06:43 GMT
புளூவேல் விளையாட்டால் மன அழுத்தத்துக்கு ஆளான என்ஜினீயரிங் மாணவருக்கு நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.
குலசேகரம்:

குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சமீபத்தில் ஊருக்கு வந்த அவர் வீட்டில் யாருடனும் பேசாமல் மன அழுத்தத்தில் இருந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டதும், இதனால் மன அழுத்தத்துக்கு ஆளானதும் கண்டுபிடிக்கப்பட்டது. தக்க நேரத்தில் பெற்றோர் மகனின் நிலையை உணர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் மீட்கப்பட்டார். தொடர்ந்து அந்த மாணவருக்கு ஆஸ்பத்திரியில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.

மாணவரின் தாயார் நர்சாக பணியாற்றி வருகிறார். இதனால் தனது மகனிடம் ஏற்பட்ட மாற்றத்தை உடனடியாக கண்டுபிடித்து விட்டார். இதன் காரணமாகவே மாணவர் தற்கொலை முயற்சியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார்.

Tags:    

Similar News