செய்திகள்

ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற 10 வாலிபர்கள் கைது

Published On 2017-06-28 06:35 GMT   |   Update On 2017-06-28 06:35 GMT
ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற 10 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் சாலையில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக 3 ஆட்டோக்கள் வேகமாக வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர் ஆனால், ஆட்டோக்கள் நிற்காமல் வேகமாக சென்றது.

போலீசார் விரட்டி பிடித்ததில் ஒரு ஆட்டோ மட்டும் சிக்கியது. அதில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர்கள் ஒடுகத்தூர் அடுத்த கட்டாபாப்பாடி மலை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை (வயது 25), ராஜா(24), மகாதேவன்(21), துரைசாமி(24), குமார்(23). ஜெயராம்(25), ரவி(27), கோவிந்தன்(22), மற்றோரு அண்ணாமலை(32) மற்றும் புளியாமாத்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(22) என தெரிய வந்தது.

அவர்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட செல்வது தெரியவந்தது. மேலும் அவர்கள் கூறியதாவது:-

பள்ளிக்கொண்டா அருகே ஒரு வேன் நிற்கும் அதில் ஏறி ஆந்திராவுக்கு செல்வோம், அங்கு எங்கள் பணி முடித்து திரும்பும் போது வேனிலேயே எங்கள் கூலியை கொடுத்து விடுவார்கள் மீண்டும் நாங்கள் எந்த நாளில் வரவேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள் அந்த நாளில் நாங்கள் மீண்டும் ஆந்திர செல்வோம் என்றனர்.

இதையடுத்து போலீசார் அந்த 10 வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களை ஆந்திராவுக்கு அழைத்து செல்லும் ஏஜெண்டு யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News