செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

மாட்டு இறைச்சிக்கு தடை விதிப்பதா?: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-29 11:37 GMT   |   Update On 2017-05-29 11:37 GMT
மத்திய அரசு இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்கவோ வாங்கவோ தடை விதித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

மாட்டு இறைச்சி தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தனி மனித உணவு உரிமையில் தலையிடக்கூடாது. மாட்டை வைத்து நடத்தும் மதவாத அரசியலை அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News