செய்திகள்
காயமடைந்த பக்தர்கள் சிகிச்சை பெறும் காட்சி

கோவில் திருவிழா: குண்டத்தில் தவறி விழுந்து 20-க்கு மேற்பட்ட பக்தர்கள் படுகாயம்

Published On 2017-04-22 05:13 GMT   |   Update On 2017-04-22 05:13 GMT
நன்னிலம் அருகே கோவில் திருவிழாவில் சப்பரத்துடன் குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் தவறி விழுந்து 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.
பேரளம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

பக்தர்கள் எடுத்து வந்த சப்பரம்

விழாவையொட்டி மேலதென்குடியிலிருந்து சப்பரத்தில் காத்தவராயன் சுவாமியை அலங்கரித்து வைத்து தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அப்போது குண்டத்தில் சப்பரத்துடன் இறங்கியவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 40) விஸ்வநாதன்(33) தமிழரசன் (30) ரெங்கநாதன் (25) ரத்தினவேல் (35) விக்னேஷ் (24) ஜெயராமன் (65) சந்திரசேகர் (45) ராஜேஷ் (25) பிரபு (24) சந்தோஷ் (20) உள்பட 20-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீ காயம் அடைந்தனர்.

அவர்களை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Similar News