செய்திகள்

சிறையில் உள்ள சசிகலா யாரை பார்க்க விரும்புகிறாரோ அவர்களுக்கு மட்டுமே அனுமதி

Published On 2017-03-31 05:48 GMT   |   Update On 2017-03-31 05:48 GMT
பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா யாரை பார்க்க விரும்புகிறாரோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்று கர்நாடக சிறைதுறை துணைத் தலைவர் கூறினார்.
வேலூர்:

வேலூர் தொரப்பாடியில் சிறை மற்றும் சீர்த்திருத்த நிர்வாக பயிற்சி மையம் (ஆப்கா) உள்ளது. இங்கு கேரளாவை சேர்ந்த சிறைத்துறை துணை கண்காணிப்பாளர்கள் 3 பேருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆப்கா இயக்குனர் ராஜா தலைமை தாங்கினார். துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பியூலா இம்மானுவேல் பயிற்சி குறித்து பேசினார்.

இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில சிறைத்துறை துணைத் தலைவர் ஜி.வீரபத்ரசுவாமி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. சாதாரண கைதிகளுக்கு சட்ட திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் தான் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா தன்னை பார்க்க வருவோரில் யாரை பார்க்க விரும்புகிறாரோ அவர்களுக்கு தான் அனுமதி அளிக்கப்படுகிறது’

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News