செய்திகள்

வேலூரில் 101 டிகிரி வெயில் கொளுத்தியது

Published On 2017-03-19 13:23 GMT   |   Update On 2017-03-19 13:23 GMT
வேலூரில் நேற்று 101 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

வேலூர்:

வேலூர் மக்கள் தற்போது வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. கோடை காலம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் 3-வது முறையாக வெயில் 100 டிகிரியை எட்டி உள்ளது.

கடந்த 9-ந்தேதி 100 டிகிரியாகவும், அதைத்தொடர்ந்து 11-ந்தேதி 102.2 டிகிரியாகவும் வெயில் அளவு பதிவானது. தற்போது 3-வது முறையாக நேற்று வெயிலின் அளவு 101 டிகிரியாக பதிவானது. இனிவரும், நாட்களில் வெயிலின் தாக்கத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆற்காடு நகரில் திடீரென சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஓடியது. மேலும் குளிர்காற்று வீச தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News