செய்திகள்

செம்மண் குவாரி வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்

Published On 2017-02-23 10:04 GMT   |   Update On 2017-02-23 10:04 GMT
செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர் ஆனார். விசாரணையை மார்ச் 14-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் மணல் அள்ளியதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் தி.மு.க.அமைச்சர் பொன்முடி,அவருடைய மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் உள்பட 8 பேர் மீது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் வழக்கில் தொடர்புடைய ஜெயச்சந்திரன், லோகநாதன், குமார், சதாசிவம், உள்பட 6 பேர் ஆஜரானார்கள். கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் 2 பேரும் ஆஜராகவில்லை.

வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி விசாரணையை வருகிற மார்ச் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதே கோர்ட்டில் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி ஆஜரானார். வழக்கின் விசாரணை மார்ச் 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News