செய்திகள்
ஏரிச்சாலை புல்வெளியில் காணப்படும் உறைபனி

கொடைக்கானலில் கடும் உறைபனி - வெப்பநிலை 5 டிகிரியாக குறைந்தது

Published On 2017-02-17 09:10 GMT   |   Update On 2017-02-17 09:10 GMT
கொடைக்கானலில் கடும்குளிர் அடிப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர்காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல்:

சுற்றுலா தலமான கொடைக்கானலில் குளிரின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கடந்த ஒரு வார காலமாக புகைமூட்டம் போல் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் காலைப்பொழுதிலும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் நிலை இருந்தது.

பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்த போதிலும் இரவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

இந்த ஆண்டின் அதிகபட்ச குளிர் நேற்று இரவு நிலவியது. வெப்பநிலை 5 டிகிரியாக குறைந்தது. இதனால் உறைபனி காணப்பட்டது. புல்வெளிகளிலும், மரங்களிலும் பனித்துளிகள் உறைந்து காணப்பட்டன.

குளிர்காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலையில் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது. கடும் குளிர் காரணமாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இரவில் தங்குவதற்கு விரும்புவதில்லை. பிரையண்ட் பூங்காவில் பனிப்பொழிவில் இருந்து மலர்செடிகளை பாதுகாக்க போர்வையால் மூடப்பட்டுள்ளது.



Similar News