செய்திகள்

தமிழர்களின் வீரமும் அன்பும் என்னை கவர்ந்தது - தலைமை நீதிபதி பெருமிதம்

Published On 2017-02-16 06:42 GMT   |   Update On 2017-02-16 06:42 GMT
தமிழர்களின் வீரம் மற்றும் அன்பு ஆகியவை தன்னை வெகுவாக கவர்ந்தது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தனது பிரிவு உபசார நிகழ்சியில் பெருமிதத்துடன் பேசினார்.
சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது இருக்கும் எஸ்.கே.கவுல், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று செல்ல இருக்கிறார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று பிறப்பித்திருந்தார். இதையொட்டி சென்னையில் அவருக்கு இன்று பிரிவு உபச்சார விழா நடந்தது. 

இவ்விழாவில் பேசிய எஸ்.கே.கவுல், “தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும் தனித்துவமானது மற்றும் யாருடனும் ஒப்பிட முடியாதது. இது என்னை பெருமையடையச் செய்தது. தமிழர்களின் வீரமும் அன்பும் என்னை வெகுவாக கவர்ந்தது. இளம் வழக்கறிஞர்களுக்கு மூத்த வழக்கறிஞர்கள் தேவையான ஊக்கமளித்து வழிகாட்டியாக இருக்க வேண்டும்.” என பெருமிதத்துடன் பேசினார்.

விரைவில் எஸ்.கே.கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிவு உபச்சார விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களள் கலந்து கொண்டனர்.

Similar News