செய்திகள்

தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம்: டி.ஜி.பி.யுடன் ஆளுநர் ஆலோசனை

Published On 2017-02-14 15:01 GMT   |   Update On 2017-02-14 15:01 GMT
தமிழகத்தின் தற்போதைய சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவுடன், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை:

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், ஆட்சி அரியனையில் அமரப் போவது யார்? என்ற குழப்பம் அனைவருக்கும் நீடித்து வருகிறது. இன்று மாலை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மைத்ரேயன் எம்.பி உள்ளிட்டோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

இதற்கிடையில், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் தண்டிக்கப்பட்ட சசிகலாவை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போதைய சட்டம் - ஒழுங்கு சூழ்நிலை குறித்து, தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர், ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை சந்தித்தனர். ஆளுநருடனான சந்திப்பின் போது தற்போதைய சட்டம் - ஒழுங்கு சூழ்நிலை குறித்து டி.ஜி.பி எடுத்துக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News