செய்திகள்

திருவள்ளூர்: வாகன சோதனையில் 211 வழக்குப்பதிவு ரூ. 40 ஆயிரம் அபராதம்

Published On 2017-01-28 09:38 GMT   |   Update On 2017-01-28 09:38 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ.40 ஆயிரம் வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திருவள்ளூர் சப்டிவிசன் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை திடீர் வாகன சோதனை நடைபெற்றது.

இதில், குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 9 வழக்குகள், லாரிகளில் மணல் திருடிச் சென்றதாக, சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, மதுக்கடையில் சரக்குகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றது, ஓவர் லோடு, அதிக பாரம், அதிக வேகம் என 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ.40 ஆயிரம் வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது. மேலும், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் 66 பேர் போலீ சாரிடம் பிடிபட்டு உள்ளனர்.

Similar News