செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்தது
மேட்டூர் அணையில் நீர் திறப்பை விட, நீர் வரத்து குறைவாக உள்ள காரணத்தினால் அணை நீர்மட்டம் நேற்று 35.08 அடியாக குறைந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப் படாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக விநாடிக்கு 40 கன அடிக்கு குறைவாகவே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது. இன்று விநாடிக்கு 35 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர் திறப்பை விட, நீர் வரத்து குறைவாக உள்ள காரணத்தினால் அணை நீர்மட்டம் நேற்று 35.08 அடியாக குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் சற்று குறைந்து 35.06 அடியாக உள்ளது.