செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்: இளைஞர்கள் அறிவிப்பு

Published On 2017-01-21 06:40 GMT   |   Update On 2017-01-21 06:40 GMT
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கூறினார்கள்.

சென்னை:

மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்காக திரண்டுள்ள எங்களது போராட்டம் வீண் போய் விடக்கூடாது. தற்போது தமிழக அரசு ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

அதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்துள்ளது. இந்த நடவடிக்கைகள் எங்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.


ஆனால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்போ, புதிய சட்டம் கொண்டு வந்தால் அதற்கும் தடை வாங்குவோம் என்று அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாடிவாசலை திறந்து நானே ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பேன் என்று கூறி உள்ளார்.

இதை ஏற்று நாங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டால் அதன் பிறகு அரசின் செயல்பாடுகளில் வேகம் இருக்காது. எனவே மத்திய விலங்குகள் நல வாரியமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு இனி எந்த காலத்திலும் தடை வராது என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும்.


அது போன்ற அறிவிப்பு வெளியாகி ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News