செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி 22 பேர் சைக்கிள் பேரணி - கோவையில் வரவேற்பு

Published On 2016-12-07 12:21 GMT   |   Update On 2016-12-07 12:21 GMT
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி 22 பேர் சைக்கிள் பேரணி தொடங்கினர். அவர்கள் நேற்று மாலை கோவை வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை:

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 22 சைக்கிள் பந்தய வீரர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,500 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை கடந்த நவம்பர் 7-ந் தேதி தொடங்கினர். அவர்கள் நேற்று மாலை கோவை வந்தனர். சைக்கிள் பயண குழுவுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலை 6.30 மணியளவில் சைக்கிள் பந்தய வீரர்கள் கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வழியாக கன்னியாகுமரிக்கு பயணத்தை தொடங்கினர்.

பயணத்தை ரோட்டரி மாவட்ட ஆளுனர் (தேர்வு) பதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சைக்கிள் பந்தய வீரர்களுடன் கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு கோவையை சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர்களுடன் புறப்பட்டு சென்றார்.

Similar News