செய்திகள்

இடதுசாரி கட்சிகள் 28–ந்தேதி நடத்தும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்- திருமாவளவன்

Published On 2016-11-25 21:48 GMT   |   Update On 2016-11-25 21:48 GMT
28–ந்தேதி தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைத்து நடத்தவுள்ள அனைத்துவிதமான போராட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சட்டவிரோதமான முறையில் அறிவிப்புச்செய்து மோடி அரசு இந்தியாவில் ஒரு பொருளாதார அவசரநிலையைப் பிறப்பித்திருக்கிறது. மோடி அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கையால் ஏழை–எளிய மக்கள் சொல்லமுடியாத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை உணர்ந்துதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் நவம்பர் 28–ந்தேதியை ‘தேசிய எதிர்ப்பு நாளாக’ அறிவித்திருக்கின்றன. அதை ஆதரித்து அந்தப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டியது நமது கடமையாகும். எனவே, அந்தப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 28–ந்தேதி தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைத்து நடத்தவுள்ள அனைத்துவிதமான போராட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News