செய்திகள்

மதுரை மாவட்ட பஞ்சாயத்து 23 வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

Published On 2016-09-26 10:48 GMT   |   Update On 2016-09-27 06:06 GMT
மதுரை மாவட்டத்தில் உள்ள 23 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை:

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 17, 19-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடை பெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 23 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1.பாண்டியம்மாள், (சேடப்பட்டி மகளிர் அணி துணை செயலாளர்), 2.சுவாதி (சின்னக்கட்டளை), 3.செல்வமணி (மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்), 4.சுதாகரன் (உசிலம்பட்டி, பேரவை துணைத்தலைவர்), 5.பிரேம் ஆனந்த் (புறநகர் மாவட்ட பேரவை தலைவர்), 6.போத்திராஜன் (புறநகர் மீனவர் பிரிவு செயலாளர்), 7.சரவணன் (சோழவந்தான் தொகுதி முன்னாள் செயலாளர்), 8.முருகேஸ்வரி (முடுவார் பட்டி), 9.கீதாரவிச்சந்திரன் (அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்), 10.சுதா கனகராஜன் (மதுரை மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறை), 11.திருநாவுக்கரசு (காஞ்சரம்பேட்டை), 12.பாலு (புறநகர் மாவட்ட பேரவை துணைத்தலைவர்), 13.சேகர் (கள்ளந்திரி கிளை செயலாளர்), 14.லட்சுமி (வெள்ளாப்பட்டி, மணப்பச்சேரி), 15.நாச்சம்மாள் (கேசம்பட்டி அஞ்சல், மேலூர் தாலுகா), 16.பானுமதி (மேலூர் ஒன்றிய இளைஞர் பாசறை), 17.அரசி (பதினெட்டாங்குடி, மேலூர் வட்டம்), 18.செல்வி சரவணன் (கீழத்தெரு, பனையூர்), 19.ஜெயக்குமார் (நாகமலைப்புதுக்கோட்டை ஊராட்சி தலைவர்), 20.சந்திரன் (புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்), 21.அய்யப்பன் (புறநகர் துணை செயலாளர்), 22.பஞ்சவர்ணம் (சவுடார்பட்டி, திருமங்கலம்), 23.வசந்தா (காசிபுரம், புளியங்குளம், திருமங்கலம்).

Similar News