விளையாட்டு

மாட்டிறைச்சி இல்லாமல் மேட்ச்-ஆ? வைரலாகும் உலகக் கோப்பை உணவுப்பட்டியல்

Published On 2023-09-30 12:26 GMT   |   Update On 2023-09-30 12:26 GMT
  • உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • மாட்டிறைச்சி இடம்பெறாதது சர்ச்சையாகி இருக்கிறது.

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்கி, ஒரு மாத காலத்திற்கு நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஒவ்வொரு அணியாக இந்தியா வந்தடைந்துள்ளன. இந்த நிலையில், இந்தியா வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி வீரர்களுக்கான உணவு பட்டியலில் மாட்டிறைச்சி தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மாற்றாக ஆட்டிறைச்சி, கோழிக்கறி, மீன் போன்ற அசைவ உணவு வகைகள் வீரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்தனர்.

இவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் மட்டன் சாப்ஸ், ஆட்டிறைச்சி குழம்பு, பட்டர் சிக்கன் மற்றும் வறுத்த மீன் மற்றும் பாசுமதி அரிசி, ஸ்பகெட்டி மற்றும் போலொனிஸ் சாஸ், காய்கறி புலாவ் மற்றும் ஐதராபாத் பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் மாட்டிறைச்சி இடம்பெறாதது சர்ச்சையாகி இருக்கிறது.

உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், இந்தியா வந்திருக்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் மாட்டிறைச்சி சேர்க்கப்படவில்லை என்ற கருத்துக்களை நெட்டிசன்கள் முன்வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் சமூக வலைதளங்களில் துவங்கி உள்ளன.

Tags:    

Similar News