செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித்

இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்

Published On 2019-09-13 12:28 GMT   |   Update On 2019-09-13 12:28 GMT
இந்த தலைமுறையின் சிறந்த வீரர் ஸ்டீவ் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல் அடித்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் நம்பமுடியாத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை நடந்து முடிந்த நான்கு டெஸ்டில் மூன்றில் மட்டுமே களம் இறங்கினார். ஐந்து இன்னிங்சில் பேட்டிங் செய்த ஸ்மித் மூன்று சதங்களுடன் 650 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இதனால் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படும் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்மித் ஆகியோரில் ஸ்மித்துதான் சிறந்த வீரர் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரை கிண்டல் அடித்து இங்கிலாந்து கவுண்ட்டி அணி டுவீட் செய்துள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் லீச் பேட்டிங் செய்து ஆட்டமிழக்காமல் டிரெஸ்சிங்  அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ஸ்மித் அவருடன் பேசிக் கொண்டு வந்தார். அப்படத்துடன் ‘‘இந்த தலைமையின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித்துடன் பேசிக் கொண்டு வருகிறார்’’ என்று சோமர்செட் கவுன்ட்டி அணி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Tags:    

Similar News