செய்திகள்
டீம் இந்தியா

கயானாவில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட்

Published On 2019-08-05 09:26 GMT   |   Update On 2019-08-05 09:26 GMT
அமெரிக்காவில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி கயானாவில் நாளை நடக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்சில் நடந்தது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை வெஸ்ட் இண்டீசின் கயானாவில் புரோலிடென்சேவில் நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

நாளைய ஆட்டத்திலும் இந்தியா வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் இருப்பதால் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் வெஸ்ட்இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும்.
Tags:    

Similar News