செய்திகள்
ஸ்டீவ் வாக்

ஆஷஸ் தொடரை இவர்கள்தான் வெல்வார்கள் என்று கணிக்க முடியவில்லை: ஸ்டீவ் வாக்

Published On 2019-07-28 11:05 GMT   |   Update On 2019-07-28 11:05 GMT
ஆஷஸ் தொடரை இவர்கள்தான் வெல்வார்கள் என்று கணிக்க முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக ஆஷஸ் தொடர் பார்க்கப்படுகிறது. இத்தொடரை வெல்வதை  இரண்டு அணிகளும் கவுரவ பிரச்சனையாக கருதம். 2010-11-ல் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதற்கு முன் 2001-ல் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் மண்ணில் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. அதன்பின் பெரும்பாலும் இரண்டு அணிகளில் சொந்த மைதானத்தில்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

2001-ல் இங்கிலாந்து மைதானத்தில் தொடரை வென்றதால் அனுபவம் கைக்கொடும் எனக் கருதி, ஸ்டீவ் வாக்கை ஆலோசகராக நியமித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. இந்த அணிதான்வெல்லும் என்று கணிக்க முடியவில்லை என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடர் குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘ ஆறு வாரத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் அசத்துவார்கள். தொடர் முழுவதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். தற்போது இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் அடைந்திருப்பது இரு அணிகளுக்குமு பாதிப்பை ஏற்படுத்தும்.



உண்மையிலேயே நான் ஒரு பேட்டிங் மேனாக இருந்தால் ஒரு அணிக்கு சாதகமாக என்னால் இருக்க முடியாது. ஏனென்றால், யார் இதில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதே எனக்கு தெரியவில்லை. இது மிகச் சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கப் போகிறது’’ என்றார்.
Tags:    

Similar News