செய்திகள்
சீன வீரர் சன் யங் பிரிட்டன் வீரர் ஸ்காட்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய சீன வீரருடன் போடியம் ஏற மறுத்த பிரிட்டன் வீரர்

Published On 2019-07-23 14:08 GMT   |   Update On 2019-07-23 14:08 GMT
தென்கொரியாவில் நடைபெற்று வரும் நீச்சல் போட்டியில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய சீன வீரருடன் போடியம் ஏற மறுத்த பிரிட்டன் வீரரால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்கொரியாவில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் சீனாவின் சன் யங் தங்கம் வென்றார். பிரிட்டனைச் சேர்ந்த டங்கன் ஸ்காட் 3-வது இடம் பிடித்தார்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தேசியக் கீதம் ஒலிக்கப்பட்ட பின் குரூப் போட்டோ எடுக்க தயாரான போது ஸ்காட் போடியத்தில் இருந்து இறங்கினார். மேலும்  சன் யங் உடன் கைக்குலுக்க மறுத்துவிட்டார். இதனால் சன் யங் கோபத்துடன்கத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



ஏற்கனவே 400 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவின்போது பிரிட்டன் வீரர் ஹார்ட்டன் சன் யங் உடன் போட்டோ எடுக்க மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



சீன வீரரான சன் யங் கடந்த 2014-ம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்டார். நான் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை. இதய நோய் சார்பாக மருந்து எடுத்தேன் என்று கூறினார். பின்னர் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த வருடம் இதுபோன்ற ஒரு பிரச்சனையில் சிக்கினார். இருந்தாலும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News