செய்திகள்
இலங்கை வங்காள தேசம்

இலங்கை செல்கிறது வங்காள தேசம், நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள்

Published On 2019-07-10 12:01 GMT   |   Update On 2019-07-10 12:01 GMT
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின் வங்காள தேசம், நியூசிலாந்து அணிகள் அங்கு சென்று விளையாடுகின்றன.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று பிரார்த்தனை நடைபெற்ற முக்கியமான தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். மேலும் நட்சத்திர ஓட்டல்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. பாதுகாப்பு காரணம் காட்டி சில அணிகள் இலங்கை செல்லாமல் இருந்தது.

இந்நிலையில் வங்காள தேசம், நியூசிலாந்து அணிகள் இலங்கை சென்று விளையாடுகின்றன. இதை இலங்கை கிரிக்கெட் போர்டு உறுதி செய்துள்ளது.

இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஜூலை 26, 28 மற்றும் 31-ந்தேதிகளில் இந்த போட்டிகள் கொழும்பு பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

அதன்பின் ஆகஸ்ட் மாதம் இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலேயில் ஆகஸ்ட் 14-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கொழும்பில் ஆகஸ்ட் 22-ந்தேதியும் நடக்கிறது.

மூன்று டி20 போட்டிகள் ஆகஸ்ட் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.
Tags:    

Similar News