செய்திகள்

பிபா கால்பந்து தரவரிசை: இந்தியாவுக்கு 101-வது இடம், போர்ச்சுக்கல் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்

Published On 2019-06-14 13:53 GMT   |   Update On 2019-06-14 13:53 GMT
பிபா வெளியிட்டுள்ள கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 101-வது இடத்தை பிடித்துள்ளது. போர்ச்சுக்கல் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
விளையாட்டுத்துறையில் உலகின் மிகப்பெரிய கூட்டமைப்பான உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) கால்பந்து அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெல்ஜியம் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. போர்ச்சுக்கல் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளது. நேஷன்ஸ் லீக் கோப்பையை வென்றதால் அந்த அணி இரண்டு இடங்கள் முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து 14-வது இடத்தில் உள்ளது.

இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. ஆசிய நாடுகளான ஈரான் 20-வது இடத்திலும், ஜப்பான் 28-வது இடத்திலும், கொரியா 37-வது இடத்திலும், கத்தார் 55-வது இடத்திலும் உள்ளன.
Tags:    

Similar News