செய்திகள்

4-வது ஒருநாள் கிரிக்கெட்: அயர்லாந்தை 109 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Published On 2019-03-08 15:00 GMT   |   Update On 2019-03-08 15:00 GMT
4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 114 ரன்னில் சுருட்டி 109 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். #AFGvIRE
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் ஒன்று மழையால் ரத்து செய்யப்பட்டது. மற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

4-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் களம் இறங்கியது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் அஷ்கர் ஆப்கன் 54 ரன்களும், முகமது நபி 64 ரன்களும், ரஷித் கான் 52 ரன்களும் அடிக்க ஆப்கானிஸ்தான் 49.1 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் அஃப்தாப் ஆலம் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அயர்லாந்தின் விக்கெட்டுக்கள் மளமள என சரிந்தது. அயர்லாந்தின் நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைத் தாண்டினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அயர்லாந்து 114 ரன்னில் சுருண்டது. இதனால் அயர்லாந்து 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் ஆஃப்தாப் ஆலன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
Tags:    

Similar News