செய்திகள்

வெலிங்டன் டெஸ்ட்: மழையால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல்நாள் ஆட்டம் ரத்து

Published On 2019-03-08 10:01 GMT   |   Update On 2019-03-08 10:01 GMT
கடும் மழையால் நியூசிலாந்து - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. #INDvAUS
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.



முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2-வது டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்குவதாக இருந்தது. கனமழையால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. நாளை மழை குறுக்கிடாமல் இருந்தால் டாஸ் சுண்டப்பட்டு போட்டி தொடங்கும்.
Tags:    

Similar News