செய்திகள்

200 பேர் பங்கேற்கும் தேசிய நடைப்பந்தயம் சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது

Published On 2019-02-15 09:17 GMT   |   Update On 2019-02-15 09:17 GMT
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப் அருகில் இருந்து அதிகாலையில் இந்த போட்டி தொடங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நாளையும் ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான 10 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் 17-ந்தேதியும் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் முன்னணி வீரர்களான இர்பான், மனிஷ் சிங் ரவாத், வீராங்கனைகள் சவுமியா பேபி, ரவினா சந்தர், சாந்திகுமாரி உள்பட 200 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் தகுதி இலக்கை எட்டும் வீரர்- வீராங்கனைகள் கத்தாரில் செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெறுவார்கள்.

இந்த போட்டியில் பங்கேற்க ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்- வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சீன தைபே, மலேசியா வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்துவதால் மற்ற நாட்டு வீரர்கள் வரமுடியவில்லை. இந்தப் போட்டி நாளையும் (16-ந்தேதி), நாளை மறுநாளும் (17-ந்தேதி) நடக்கிறது.
Tags:    

Similar News