செய்திகள்

இங்கிலாந்து உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்- மொயீன் கான் நம்பிக்கை

Published On 2019-02-13 11:41 GMT   |   Update On 2019-02-13 11:41 GMT
இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை முதன்முறையாக பாகிஸ்தானால் வீழ்த்த முடியும் என மொயீன் கான் தெரிவித்துள்ளார். #WorldCup2019
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஜூன் 16-ந்தேதி ஓல்டு டிராஃபோர்டில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதற்கு முன் 6 முறை மோதியுள்ளன. இதில் ஒருமுறை கூட பாகிஸ்தான் வெற்றி பெற்றது கிடையாது.

ஆனால் இந்த முறை இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று முன்னாள் வீரர் மொயீன் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மொயீன் கான் கூறுகையில் ‘‘தற்போதுள்ள பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்கக் கூடிய வல்லமை பெற்றுள்ளது. ஏனென்றால், பாகிஸ்தான் பலதரப்பட்ட திறமையுள்ள வீரர்கள் உள்ளனர். கேப்டன் சர்பிராஸ் அகமது வீரர்களுடன் ஒன்றிணைந்து உள்ளார்.

பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு வருடத்திற்கு முன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. ஜூன் மாதம் சீதோஷ்ணநிலை எங்களது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

இது மிகவும் சுவாரஸ்யமான உலகக்கோப்பை தொடராக இருக்கும். பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் சிறந்த உத்வேகத்துடன் உள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடருக்குப்பின் உலகக்கோப்பையில் களம் இறங்குவது சிறப்பான அம்சம்.

கடந்த சில வருடங்களாக இங்கிலாந்தில் வெற்றி பெற்ற அணிகளில் ஒன்று பாகிஸ்தான். இங்சிலாந்தில் மே - ஜூன் வானிலை எதிர்பாராத வகையில் இருக்கும். ஆடுகளம் மீது ஈரப்பதம் காணப்படும்’’  என்றார்.
Tags:    

Similar News