செய்திகள்

பிக் பாஷ் டி20 லீக்: சிட்னி தண்டர் அணியை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்

Published On 2019-02-02 15:45 GMT   |   Update On 2019-02-02 15:45 GMT
பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ். #BigBashLeague
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, சிட்னி தண்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

சிட்னி சிக்சர்ஸ் அணியின் பந்துவீச்சில் சிக்கிய தண்டர்ஸ் அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில், சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரிஸ் கிரின் 32 ரன்னும், ஷேன் வாட்சன் 28 ரன்னும் எடுத்தனர்.

சிட்னி சிக்சர்ஸ் அப்பாட், டாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது. மழை பெய்ததால் 12 ஓவரில் 84 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ஜோஷ் பிலிப் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த டேனியல் ஹியூஸ், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். இருவரும் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

சிட்னி சிக்சர்ஸ் அணி 10.3 ஓவரில் 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹ்யூஸ் 41 ரன்னும், வின்ஸ் 43 ரன்னும் எடுத்து  ஆட்டமிழக்காமல் இருந்தார். #BigBashLeague
Tags:    

Similar News