செய்திகள்
சோனியா சாஹல்

உலக குத்துச்சண்டை போட்டி- இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி

Published On 2018-11-21 06:46 GMT   |   Update On 2018-11-21 06:46 GMT
உலக மகளிர் குத்துச்சண்டை அரை இறுதி போட்டியில் மேரிகோம், சாஹல், லோவிலினா, சிம்ரன்ஜித் கவூர், ஆகியோர் தகுதி பெற்ற நிலையில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகி உள்ளது. #MaryKom #WorldBoxing
புதுடெல்லி:

10-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதன் அரை இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனைகளான மேரிகோம் (48 கிலோ பிரிவு), சோனியா சாஹல் (57 கிலோ பிரிவு) லோவிலினா போர்கோஹன் (69 கிலோ பிரிவு), சிம்ரன்ஜித் கவூர் (64 கிலோ பிரிவு) ஆகிய 4 பேர் தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது.

பிங்கிராணி, மனிஷா, பாக்யபதி, சீமா புனியா ஆகிய 4 இந்திய வீராங்கனைகளும் கால்இறுதியில் தோற்றனர்.

35 வயதான மேரிகோம் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஏற்கனவே 5 தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்று இருந்தார்.

தற்போது மேலும் ஒரு பதக்கத்தால் அவரது பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லர் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 6 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. #MaryKom #LovlinaBorgohain #SimranjitKaur #SoniaChahal  #WorldBoxing
Tags:    

Similar News