செய்திகள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு- தெண்டுல்கர்

Published On 2018-11-02 10:40 GMT   |   Update On 2018-11-02 10:40 GMT
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது என தெண்டுல்கர் கூறியுள்ளார். #AUSvIND
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த கால ஆஸ்திரேலிய அணியையும் தற்போதுள்ள அணியையும் பார்த்தால் இந்தியாவுக்கே வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் அவர்கள் (ஆஸ்திரேலியா) உயர்ந்த நிலையில் இருந்தனர். அனுபவமிக்க வீரர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அனுபவம் குறைந்த வீரர்கள் உள்ளனர்.



ஒரு வலுவான அணியை உருவாக்க ஒன்றாக இணைந்து முயன்று வருகிறார்கள். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் சவால் அளிக்கக் கூடியவர்கள். அவர்கள் கடும் சவால் அளித்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஆஸ்திரேலிய சவாலை எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது என்றார்.
Tags:    

Similar News