செய்திகள்

அதிக வருமானம் பெறும் வீராங்கனைகள் பட்டியலில் பிவி சிந்துவிற்கு 7-வது இடம்

Published On 2018-08-23 10:33 GMT   |   Update On 2018-08-23 10:33 GMT
அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் பிவி சிந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். #PVSindhu
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக திகழ்வதால் இவரை ஏராளமான நிறுவனங்கள் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் அதிக அளவில் வருமானம் பெறுகிறார்.

இந்நிலையில் அதிக வருமானம் பெறும் வீராங்கனைகள் பட்டியலை முன்னணி பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் பிவி சிந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 2017 ஜுன் முதல் 2018 ஜுன் வரை 8.5 மில்லியன் அமெரிக்கா டாலர் சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதல் இடத்தில் உள்ளார். பிவி சிந்து டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப், ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் ஆகியோர் பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிவி சிந்து பிரிட்ஜ்ஸ்டோன், கட்டோரேட், நோக்கியா, பானாசோனிக், ரொக்கிட் பென்கிஸ்செர் உள்பட பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் விசாக் ஸ்டீல் ஆகியவற்றின் தூதராகவும் இருக்கிறார்.
Tags:    

Similar News